ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

0
87

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

புதிதாக இரண்டு அணிகள் மற்றும் மெகா ஏலம் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது.

அந்த வகையில், ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால், பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் ஐபிஎல் ஏலத்தை பெங்களூருவுக்கு வெளியே மாற்றலாமா அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாமா என்பது குறித்து முடிவெடுப்பதில் கிரிக்கெட் வாரியம் குழம்பி வருகிறது.

இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் சீசனுக்கான கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன.

ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் நடத்தவே விரும்புவதாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே, ரசிகர்கள் இல்லாமல் இந்தியாவில் நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பை நகரத்தில் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மும்பை நகரத்தில் வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் என 3 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடந்த உகந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் இங்கு வேறு எந்த உள்ளூர் போட்டிகளும் நடைபெறாத வண்ணம் பிசிசிஐ முன்கூட்டியே எச்சரிக்கையாக புக் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K