மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

0
78

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள்.

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து முன்னரே ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற மோசடி புகாரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருந்தார். மருத்துவ படிப்பிற்கான இடத்தை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து தன்னிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணத்தை திரும்பக் கேட்டபோது ஹேமந்த் தர மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையிலே, ஜெ.ஜெ நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். குற்ற எண் 789/2015) ஆனாலும் அந்த தொகை ரூபாய் 50 லட்சத்திற்கு மேலே இருந்த காரணத்தால், வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஆவண மோசடி பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.

சித்ராவும் ஹேமந்தும் நிச்சயதார்த்தம் செய்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள் .சென்ற டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை சென்னை புறநகரில் இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் சித்ரா.

இதுகுறித்து ஹேமந்த் இடம் ஆறு தினங்களில் விசாரணை நடத்திய பிறகு சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் நசரத்பேட்டை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பிறகு விசாரணைக்காக வருவாய் கோட்ட அலுவலர் முன்பாக வேண்டியதற்கு ஒரு நாள் முன்பாகவே இந்த இரண்டாவது கைது நடந்திருக்கிறது.