இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

0
73
Chinese investments in Indian start-ups-News4 Tamil Latest Business News in Tamil
Chinese investments in Indian start-ups-News4 Tamil Latest Business News in Tamil

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோர் சந்தையும், பல நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களாகிய இளைய தலைமுறையினரையும் மிகவும் அதிகமாக கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே.இது போன்ற பல சாதகமான காரணங்களை பயன்படுத்தி கொள்ள நினைத்த அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் தற்போது இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சீனாவில் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கியக்காரணமாக கூறப்படுவது அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தான், அதாவது சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும் என இரு நாடுகளும் அதிகளவிலான வரியை விதித்துள்ளன. இந்நிலையில் தான் இதையெல்லாம் சமாளிக்க முடியாத நிலையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கரோனாவைரஸ் பாதிப்புச் சீனாவில் உணவு சந்தையை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இவ்வாறு சீனாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் சீனாவில் மேலும் புதிய வாய்ப்புகள் எதுவும் பெரிதாகக் கிடைக்காத சூழ்நிலையில், சீனா முதலீட்டாளர்கள் தற்போது வளரும் நாடான இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும், உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டு தற்போது இந்தியாவிற்குப் படையெடுத்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு சீன பெரும் நிறுவனங்கள், வென்சர் பண்ட்ஸ் மற்றும் பெரும் பணக்காரர்கள் வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இந்தியா தான் அடுத்த 10 ஆண்டுகளில் ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கப் போகிறது. இதை உணர்ந்த சீன முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவில் முதலீடு செய்யத் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தற்போதைய நிலையில் Boyu Capital, Horizons China, Sinovation Ventures, Legend Capital, ZhenFund, XVC Capital, Integrated Capital ஆகிய முதலீட்டு நிறுவனங்களும், Jingdong, Kunlun, Kuaishou, Ping An மற்றும் YY.com ஆகிய கார்பரேட் முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்யச் சந்தையை ஆய்வு செய்ய அவர்களது ஆய்வாளர்களை இதற்காக நியமித்து உள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவில் அலிபே, டிடி, சியோமி மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது புதியதாக முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன முதலீட்டாளர்கள் கடந்த 2019ஆம் ஆண்டே இந்தியாவில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இந்தியச் சந்தையில் வெறும் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 100 சதவீத அதிகப் பணத்தை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது நிலையில் இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்த முதலீட்டு அளவானது 2020 ஆம் ஆண்டில் 6 முதல் 8 பில்லியன் டாலர் வரையில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.