இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

0
44

எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எந்த அனுமதியும் இன்றி உரிமம் கூட வாங்காமல் சீனாவின் நிறுவனங்களால் 300 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு வட்டிக்கு விட்டு வாங்குவது எவ்வாறு சாத்தியமாகிறது. என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்ற சில வாரங்களில் மட்டும் 5 க்கும் அதிகமானவர்களின் உயிரை குடித்து இருக்கின்ற இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களை நடத்தி வந்த இரு சீன நாட்டை சார்ந்தவர்கள் உள்பட 4 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். இணையதள கந்துவட்டி செயலி மூலமாக நிறுவனங்களின் பின்னணி குறித்த வெளியாக இருக்கின்ற முதல் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றன.

மிகவும் எளிமையான முறையில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் கடன் வழங்குவதாக தெரிவித்து, அனேக இணையதள கண்டுபிடி செயலிகள் ஆரம்பிக்கப்பட்ட இருக்கின்றன. இந்த செயலிகள் மூலமாக கடன் பெற்று அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாதவர்கள் அவமானத்திற்கும், மிரட்டலுக்கும் உட்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகவும், இதற்கு காரணமான செயலிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக முதன் முதலில் சென்ற நவம்பர் மாதம் 27ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டதை அடுத்து கந்துவட்டி செய்திகள் தொடர்பாக எச்சரிக்கையையும், விழிப்புணர்வு செய்திகளையும், வெளியிட்ட சென்னை மாநகர காவல்துறை இந்த குற்றத்திற்கு பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

தீவிரமான விசாரணைக்கு பின் பெங்களூரு நகரில் செயல்பட்டு வந்த இணையதள செயலி நிறுவனங்களின் பின்னணி அலுவலகத்தை முடக்கிய காவல்துறையினர் அதனை நடத்தி வந்த ஜியாமாவ், லுன், ஆகிய இரு சீன நாட்டவரை கைது செய்திருக்கிறார்கள். ஹாங், வாண்டீஸ், என்ற இரு சீன நாட்டவர்கள் சிங்கப்பூருக்கு தப்பி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது .இவர்களை தவிர இணையதள கந்துவட்டி தொழிலுக்கு துணையாக இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான திசையில், விசாரணை நடத்தி இணையதள கந்து வட்டி கும்பலை கைது செய்து இருக்கின்ற சென்னை காவல் துறையினருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் வெளிக் கொண்டு வரப்பட்ட இருக்கின்ற உண்மைகளும், எடுக்கப்பட்டு இருக்கின்ற நடவடிக்கைகளும், நீண்ட தேடுதலுக்கு பின்பு ஓரளவுக்கு மட்டுமே வெளியில் தெரியும் பனிப்பாறையில் முனைக்கும் சமமானவை தான் இணையதள கந்துவட்டி தொடர்பாக முழு உண்மைகளும் வெளிவரும் நேரத்தில், அது மிக மோசமான அதிர்வுகளை உண்டாக்க கூடும் இப்பொழுது நம்முடைய நாட்டில் செயல்பட்டு வரும் 25க்கும் அதிகமான கந்துவட்டி செயலிகள் மூலமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருக்கிறது. என்பதும் இவற்றில் பெரும்பான்மையான செய்திகள் ஒரே நிறுவனம் பல பெயர்களில் நடத்திவரும் விவகாரமும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இவையெல்லாம் முதல் கட்ட விசாரணையில் வெளியான செய்திகள் மட்டுமே. இவற்றைவிட பல மடங்கு செயலிகள் பயன்பாட்டில் இருப்பதற்கும், பல மடங்கான தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கந்து வட்டிக்கு விடப்படும் தொகையானது பெரும்பாலும் தனியார் வணிக வங்கிகளில் ஆரம்பிக்கப்பட்ட இருக்கின்ற கணக்குகளில் இருந்து தான் தனிநபர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவர்களிடம் இருந்து பெறப்படும் தொகையையும் இந்த கணக்கில்தான் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது .

தனிநபர் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஏராளமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கின்ற நிலையிலே, எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி, எந்தவித அனுமதியும் இல்லாமல் சீனாவின் நிறுவனங்களால் 300 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கி கணக்கில் செலுத்தி வட்டிக்கு விட்டு வாங்குவதை எவ்வாறு சாத்தியமாகியிருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.