ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

0
72

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஆனால் ரஷ்யாவின் தொடக்ககால நண்பராக இருந்து வரும் இந்தியா மட்டும் இது தொடர்பாக எந்தவிதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. மாறாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்தார்.

இதனைத்தொடர்ந்து 25 நாட்களை கடந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தலைநகரை கைப்பற்றுவதற்காக ரஷ்யா மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.மேலும் உக்ரைனின் மீது நடத்திய தாக்குதல் வீடியோவையும் ரஷ்யா நேற்றையதினம் வெளியிட்டது.

இந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கின்ற ரஷ்யாவிற்கு சீனா பொருளுதவி வழங்கினால் அந்த நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்று கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை செய்தார்.

ரஷ்யவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடன் சீனாவும் ஒன்றிணைந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனும் அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கின்ற அந்த நாட்டிற்கான சீன தூதர் கிங்ஆங் ரஷ்யாவிற்கு எதிராக சீனா தெரிவிக்கும் கண்டனம் போரை தடுக்க எந்த விதத்திலும் உதவி புரியாது என தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே சீனா வலியுறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ரஷ்யாவின் அண்டை நாடு என்ற முறையிலும், நட்பு ரீதியிலும், உறவுகளை சீனா விரும்புவதாகவும் ரஷ்யாவுடன் வர்த்தகம், பொருளாதாரம், நிதி எரிசக்தி துறைகளில் சீனாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.