விண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!

0
83

சீனாவின் அதிநவீன ராக்கெட்டான குய்சோ -11, இதனுடன் குறைந்த புவி வட்டப்பாதையில் சுற்றும் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு முன்பு சீனா வெற்றிகரமாக செயல்படுத்திய குய்சோ-1ஏ என்ற ராக்கெட்டின் நவீன வடிவம்தான் குய்சோ-11 ஆகும்.

இந்த ராக்கெட் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிற்க முடியும் என்று சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் நிறுவனம் முன்பு கூறியிருந்தது. இந்நிலையில் புதிய இரண்டு செயற்கைகோள்களை வணிக நோக்கத்திற்காக சீனா அனுப்ப திட்டமிட்டது.

முன்பைவிட குறைந்த செலவிலும், நவீன முறையிலும் தயாரிக்கப்பட்ட குய்சோ-11 நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. காற்றை கிழித்து விண்ணை நோக்கி பாய்ந்த ராக்கெட் ஒரு நிமடத்திற்கு பிறகு வானில் வெடித்துச் சிதறியது. 2015 ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்துவதாக இருந்த நிலையில், பல்வேறு தொழில்நுட்ப காரணத்தால் தாமதமாகி நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் பாய்ந்த ஒரு நிமிடத்தில் ராக்கெட் வெடித்துச் சிதறியது சீன விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராக்கெட் வெடித்த காரணத்தை ஆய்வு செய்வதாக சீன விண்வெளி மைய விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran