‘புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே’!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

0
78

சீன நாட்டில் முதல் முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றது.

மேலும், இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. இது போதாது என்று உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களும் பல நாடுகள் கண்டறியப்பட்டு வருகிறது.

ஆனால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதம் குறித்து இன்றும் உலகம் முழுவதும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதைப்பற்றி எந்த பதிலும் சீனா விளக்கவில்லை. கொடிய தொற்றுநோயை உருவாக்கிய சீனா இந்த வைரஸை உலகம் முழுவதும் பரப்பி விட்டு தனது நாட்டில் மட்டும் கட்டுப்படுத்தி உள்ளது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த நிலையில் சீனாவில் குரங்கு பி வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டு வருகின்றன. மேலும் பெய்ஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவருக்கு முதன்முறையாக இந்த குரங்கு பி வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் 53 வயதான ஆண், கால்நடை விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் இருந்து பணிபுரிந்தவர் ஆவார். இவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்று கூறப்படுகிறது.

இறுதியில் மே 27-ஆம் தேதி இவர் இறந்ததாக தெரிவித்துள்ளது. இதற்கு முன் சீனாவில் குரங்கு பி வைரஸ் போன்ற கருத்துக்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே சீனாவில் அடையாளம் காணப்பட்ட முதல் பாதிப்பாக இது கருதப்படுகிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்களுக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நோய்த்தொற்று முடிவுகள் நெகட்டிவ் என வந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Jayachithra