சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

0
71

சீனாவை பூர்விகமாக கொண்டு, ஹொங்கொங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் (Li-Meng Yan) என்ற பெண் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தின் மூலம் தப்பி வந்துள்ளார்.அவர் இருக்குமிடத்தை குறிப்பிடாமல் தற்போது சீனாவைப் பற்றிய சில உண்மைகளை உலகிற்கு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது

கொரோனா பரவலை அறிந்தும் சீன அரசு அதை வெளியில் சொல்லாமல் மறைத்ததாகவே நான் நினைக்கிறேன்.வைராலஜி துறையில் இருக்கும் எனது மேற்பார்வையாளர் மற்றும் அந்த துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் தொடர்பான எனது ஆய்வை மேற்கொள்ள விடவில்லை.வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்கு அந்நாட்டு மருத்துவர்கள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர்.மேலும் அந்த வைரஸை பற்றி வெளிப்படையாக பேசிய சில மருத்துவர்களும் திடீரென்று காணாமல் போய்விட்டனர்.

பெரிய துறை சார்ந்த வல்லுநர்களும் இதைப்பற்றி வாய் பேசாமல் மௌனம் காத்தனர்.வைரஸ் பற்றி சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹொங்கொங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.ஆனால் அப்பொழுதே சீன அரசு இந்த வைரஸை பற்றி மற்ற நாடுகளிடம் மறைக்காமல் உண்மையை சொல்லியிருந்தால் இந்நேரம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.

இதனால்தான் அங்கிருந்து நான் தப்பித்து அமெரிக்காவிற்கு வந்து விட்டேன்.சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்திருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன். நான் பிறந்த நாட்டில் உள்ள அரசு எனது பெயரைக் கெடுக்க மிகவும் முயற்சி செய்து வருகிறது.

எனது வாழ்க்கை இன்னும் ஆபத்தான நிலையில்தான் உள்ளது. இனி எப்போதும் என்னால் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாது.கோவிட் தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன்” என லி மெங் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra