முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

0
71
Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!
Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

தலைவர்கள் தற்போதெல்லாம் தங்களின் கருத்துக்களை நேரடியாக கூறுவதை விட சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகின்றனர்.அது மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.அவ்வாறு பேஸ்புக் எனத்தொடங்கி ட்விட்டர் வரை தங்களின் அன்றாட கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசுவதால் அவ்வப்போது சமூக வலைத்தளம் பரப்பாக காணப்படும்.அதுமட்டுமின்றி தங்களின் கட்சி தலைமை மற்றும் தனக்கென்று தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் மட்டுமின்றி அந்த கட்சி உறுப்பினர்களும் அவரவர்க்கென்று தனிப்பட்ட முறையில் கணக்கு வைத்து உள்ளனர்.பிரபலமுடைவர்களின் கணக்குகள் பலமுறை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு விடுகிறது.அதுமட்டுமின்றி மர்ம நபர்கள் ஹேக் செய்வது மட்டுமின்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களையும்  பதிவிட்டு விடுகின்றனர்.இதனால் பல கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு இருக்கையில் தற்பொழுது உத்திரப்பிரதேச முதல்வரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர்.

தற்பொழுது தான் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதில் பெருமான்மையாக அதிக இடங்களில் பாஜக கட்சி வெற்றி பெற்றது.உத்திரப்பிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்தியாநாத் பொறுப்பேற்றுள்ளார்.இவரது அலுவலக பக்கத்தை மர்ம நபர்கள் தற்பொழுது ஹேக் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இவரது டிவிட்டர் கணக்கில் இவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.அதற்கு மாறாக தற்பொழுது குரங்கு படம் ஒன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் அதீத கோவத்தில் உள்ளனர்.இதுகுறித்து சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளனர்.இவரது ட்விட்டர் கணக்கை ஹாக் செய்தது யார்? என தீவீர விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அந்த ஹேக் செய்தவர்களிடமிருந்து ட்விட்டர் பக்கத்தை மீட்கவும் முயற்சித்து வருகின்றனர்.