முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

0
171
Chief who made the goose ride! Which field will be next?
The Union Government is taking away the rights of the State Government! Government of Tamil Nadu to unite the states!

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

ஸ்டாலின் அவர்கள் பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தி உள்ளார்.இந்நிலையில் பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்து வருகிறார்.அவ்வபோது முதல்வர் என்பதை கடந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக சக மனிதரைப்போலவே காட்டிக்கொள்கிறார்.தற்போது கடந்த ஆட்சியில் செய்த ஊழலையும் வெளிக்கொண்டு வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி அமர்த்திய சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் காலத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.தற்பொழுது மக்களுக்கு இன்பச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது,கடந்த அதிமுக ஆட்சியின் போது  கருத்து  சுதந்தரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீதும்,ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியவர்கள்,மீத்தேன்-நியூட்ரினோ-கூடங்குளம் அணு உலை,சேலம் எட்டு வலை சாலை போடுவதை எதிர்த்து போராடியவர்கள் என அனைவர் மீதும் அரசு வழக்கு தொடுத்தது.அதனையடுத்து அரசாங்கத்தை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது போட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என கூறியிருந்தனர்.அதேபோல அறவழியில் போராடிய மக்கள் மீது போட்ட 5507 வழக்குகளும் திரும்ப பெறப்பட்டது.அதனையடுத்து மக்கள் மதுபான கடைகளை எதிர்த்தும்,நீட் தேர்வை ரத்து செய்யும் படியும் அறவழியில் போராட்டங்களை நடத்தினர்.

அதனால் அம்மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டது.தற்பொழுது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் இதுகுறித்து தமிழக முதல்வர் பேசினார்.அதில் அவர் கூறியதாவது,தற்பொழுது நீட் தேர்விற்கு எதிராக போராடியவர்கள் மற்றும் மதுக்கடைகளை மூட கோரியும் போராட்டம் செய்த மக்கள் மேல் உள்ள வழக்குகளை அனைத்தும் ரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகளும் ரத்து செய்யப்படும் என அதிகாரப்பூர்வ ஆணையை இன்று வெளியிட்டார்.