முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை!

0
55

முதலமைச்சர் திடீர் ஆய்வு! பணியில் இல்லாதவர்களின் மீது நடவடிக்கை!

முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். திடீரென்று ஜூன் 19 ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு   லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவமனையில் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் அவர்  இரண்டு நாட்களுக்கு முடிவு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என அறிவிப்பு வெளியாகியது. மேலும் வேலூர் மற்றும்  ராணிப்பேட்டை ,திருபத்தூர்  ஆகிய இடங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல் நலம் கருதி நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டு வாரமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். செல்லும் வழிகளில் மக்களை  சந்தித்து கோரிக்கை மனுக்களை  பெற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரசு விழாவிற்கு செல்லும் பொழுது அந்த வழியில்  சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த  பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

ஆசிரியர்களிடம் இந்த மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வளர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் பொழுது அப்பள்ளியில்  பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  ஒரு சிலர் மட்டும் இருந்த நிலையில் பள்ளி வேலை நேரத்தில் பள்ளியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் உழியர்களிடம்  விடுப்பின்  காரணத்தை கேட்டறிந்து பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

author avatar
Parthipan K