என்னுடைய பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அன்பு கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

0
53

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான, ஸ்டாலினுடைய 69வது பிறந்த நாளை நாளைய தினம் கொண்டாடவிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் பிறந்த நாளன்று பல்வேறு அன்னதான நிகழ்வுகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவைகள் திமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு பல பகுதிகளில் சிறப்பு பொதுக்கூட்டமும் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் பிரமாண்டம் இருக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு கட்டளை விதித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய மகத்தான வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக இந்த வெற்றியை நமக்கு கொடுத்து நம்முடைய நல்லாட்சிக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

6 தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திமுக கூட்டணி என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மார்ச் மாதம் 2ம் தேதி பொறுப்பேற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் மார்ச் மாதம் 4ம் தேதி மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், போன்ற பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கட்சியின் சார்பாக அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெற செய்திட வேண்டும். அதேபோலவே தோழமை கட்சியினருடன் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். பொதுமக்கள் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்கு வலுசேர்க்கும் விதத்தில் எல்லோரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் என்னுடைய பிறந்தநாளன்று நான் உங்களுக்கு வழங்கும் அன்பு பரிசாக, நன்றி பரிசாக, உங்களில் ஒருவன் என்ற தன் வரலாற்று புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகின்றேன் என்று தெரிவித்தார்.

மேலும் நாளைய தினம்(பிப்-28) நடைபெறவுள்ள அதன் வெளியீட்டு விழாவில் இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி நூலினை வெளியிடவிருக்கின்றார். திமுகவின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் என்று கழகத்தை தொடங்கியபோது அண்ணா தெரிவித்தார். இன்றைய நிலையில் முன்பை விடவும் தேவை அதிகமாகியிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூக நீதிப்பயணத்தில் தமிழ்நாட்டை கடந்து இந்திய ஒன்றியம் முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான முதல்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு நம்முடைய பயணம் மிக நெடியது.

அது முடிவதில்லை என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைதூக்கி விடக் கூடாது என்பதுதான் என்னுடைய அன்பு கட்டளை. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அறிவுப் புரட்சிக்கு வித்திடும் புத்தகங்களை வழங்குங்கள்.

கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடுங்கள் திராவிட மாடல் அரசின் 9 மாத கால சாதனைகளை எடுத்துரையுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.