எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

0
99

கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார்.

இந்த நிலையில் தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது 2018 ஆம் வருடம் இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.

போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மக்கள் கலவரம் செய்யாமலேயே காவல்துறையினர் வேண்டுமென்றே துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள் என்று தற்போது வெளியாகியிருக்கின்ற அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு இது தொடர்பாக விசாரித்து தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையில் தான் அப்போதைய தலைமைச் செயலாளர் இருந்த கிரிஜா வைத்தியநாதன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாக்குமூலத்தின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அப்போது இந்த விஷயத்தையே தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் தெரிவித்தது பொய் என்று இந்த அறிக்கையின் மூலமாக நிரூபணமகியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி மீது இதில் 302 சட்டப்பிரிவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.

302 என்பது கொலை வழக்கு சட்டப்பிரிவு என்று சொல்லப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்திருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

காவல்துறை அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்தது. தமிழக உள்துறை அவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதெல்லாம் தவிர்த்து அவர் தான் முதலமைச்சர் இதனால் அவர் மீது 302 சட்ட பிரிவின்படி நடவடிக்கை வேண்டும்.

அப்போதுதான் இதில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அதோடு இதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று எடப்பாடி பழனிச்சாமி பொய் தெரிவித்து வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் மனம் வைத்தால் சட்டப்பிரிவு 302ன் மூலமாக மொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆனால் இதில் அவர் அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க வாய்ப்பே இல்லை என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் இதில் காவல்துறை அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயரதிகாரிகள் சிலருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படவில்லை.

ஏன் யார் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை மாறாக இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது இந்த வழக்கை சிபிஐ வேறு தனியாக விசாரித்து வருகிறது. ஆகவே இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 302 வது பிரிவு சட்டப்படி வழக்கு போடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கிறார்கள் சட்டசபை வட்டாரத்தை சார்ந்தவர்கள்.