தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

0
111

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டார். அந்த சமயத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 பெண்களுக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும், அவர் இலவசமாக வழங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் நான் உரையாற்றுவது ஆக வரவில்லை ஆனால் நீங்கள் எல்லாம் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று உங்கள் சார்பாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்காக சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் தான் உரையாற்ற விரும்புகிறேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பெண்களுடைய வாழ்விற்கு எவ்வளவோ திட்டங்களை மற்றும் எவ்வளவு சாதனைகளை இப்போது மட்டுமல்லாமல் தொடர்ந்து திமுக முன்பு ஆட்சியில் இருந்த காலத்திலும் ஐந்து முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்த கலைஞரும் இப்போது ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற இருக்கக்கூடிய கழகத்தின் ஆட்சியின் சார்பாகவும், பல திட்டங்களை எல்லாம் போட்டு அதனை நிறைவேற்றி வந்திருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

பெண்களுடைய முன்னேற்றம் தான் முக்கியம் என நினைத்து சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், திருமண செலவுக்கு நிதி, உள்ளிட்டவை அடங்கிய ஆட்சிதான் எங்களுடைய ஆட்சி என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர்.

தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கின்றோம், எதையெல்லாம் நிறைவேற்ற இருக்கிறோம், என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மகளிர் பேருந்துகளில் பயணம் செய்யும் சமயத்தில் இலவசமாக பயணம் செய்யலாம் இங்கு கூட இந்த சான்றிதழ்களை வழங்க இருந்த சகோதரிகளும், தாய்மார்களும், நாங்கள் எல்லாம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்தோம் என்று உங்களுடைய நன்றியை தெரிவித்து. உள்ளீர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்திருக்கக் கூடிய உறுதிமொழிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.