முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் திருச்சி பயணம்! டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்!

0
167

வருடம்தோறும் கல்லணை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் தான்.

ஆனால் வருடம் தோறும் தவறாமல் இந்த இரு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் அப்படி திறந்து விடப்படும். தண்ணீர் முழுமையாக கடைமடை வரை சென்று சேர்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காரணம் இடையிலிருக்கும் கால்வாய்கள், வாய்க்கால்கள், உள்ளிட்டவை சேதமடைந்திருப்பதால் கடைசிவரையில் இந்த நீர் சென்று சேர்வதில்லை.

மாநில அரசும் ஏதோ கடமைக்கு வருடம்தோறும் தண்ணீரை திறந்துவிட்டு தன்னுடைய வேலைகளை பார்க்க சென்று விடுகிறது.

ஆனால் இந்த தண்ணீர் முழுமையாக கடைமடை வரையில் சென்று சேராத நிலையில் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைகிறார்கள் அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சொல்லிமாலாது.

இந்த நிலையில், மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து கடைமடை பகுதி விவசாயத்திற்கும் தண்ணீர் முழுமையாக சென்று சேரும் விதத்தில் காவிரி, டெல்டா, மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால், வாய்க்கால்களை, தூர்வாரும் பணி நிறைவடையும் நிலையிலிருக்கிறது.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று திருச்சிக்கு வருகிறார்.

அங்கே ஆய்வு செய்த பிறகு கார் மூலமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புறப்படுகிறார் .வேளாங்கண்ணியில் ஸ்டாலின் இரவு தங்குவதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை காலை வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்டம் கருவேலங்கடையிலுள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.

அதன்பிறகு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்யவிருக்கிறார்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்யவிருக்கிறார்.

அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தரும் அவர் அம்மாபேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.

இந்த ஆய்வை முடித்துக் கொண்டு திருச்சி விமானநிலையத்திற்கு திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே பத்திரிக்கையாளர்களை சந்தித்து ,அதன் பிறகு விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்