பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! 

0
95

பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! 

பிரபல சண்டை இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தனத்தின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1970 – 80களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி இயக்குனராக இருந்தவர் ஜூடோ கே.கே.ரத்தினம். பொதுவாக ரஜினி என்றாலே சண்டை பயிற்சி ரத்தினம் தான் என்ற அளவிற்கு ரஜினியின் 46 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இறுதியாக 1992ல் வெளிவந்த பாண்டியன் படத்தில் பணியாற்றி இருந்தார்.

1200 படங்களுக்கு மேல் பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.  மேலும் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஜூடோ ரத்தினம்  குடியாத்தத்தில் உள்ள அவர் அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில்,  பழம்பெரும் சண்டை பயிற்சி இயக்குனரான ஜூடோ ரத்தினம் மறைவை கேட்டு வேதனை அடைந்தேன். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 1200 படங்களுக்கு மேல் பணியாற்றி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நடிகர்களின் படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார். பொதுவுடமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

திரை உலகிலும், அரசியல் உலகிலும் தனது பங்களிப்பை சிறப்பான முறையில் அளித்த ஜூடோ ரத்தினம் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரத்தினம் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இப்போது அவர் கூறுகையில் சண்டை பயிற்சியில் தனக்கென ஒரு பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். அவரது உதவியாளர்கள் பலர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றுகின்றனர். எப்பொழுதும் உதவியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சண்டை பயிற்சியில் ஈடுபடுவார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் பல திரையுலக, அரசியல் உலக பிரபலங்களும் ஜூடோ ரத்தினம் மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.