பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் முறையாக உலரிய முதல்வர் பழனிச்சாமி! என்ன சொன்னார் தெரியுமா?

0
87
Edappadi Palanichamy
Edappadi Palanichamy

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இதனால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அம்மா உணவகம் புகலிடமாக இருந்துவந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அம்மா உணவகத்தில் மக்கள் அதிகமாக வருவதால் இன்று முதல்வர் அம்மா உணவகம் ஒன்றில் அதிரடியாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் முதல்வர் பழனிசாமி அம்மா உணவகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், உணவருந்தும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மக்கள் பயன்படுத்தும் தட்டுகள் சரியாக சுத்திகரிக்க படுகின்றனவா உணவகங்கள் சுகாதாரமாக இருக்கின்றனவா என்று பார்வையிட்டார்.

இதற்கிடையில் உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதனை செய்ய மக்களோடு மக்களாக சேர்ந்து தட்டில் உணவருந்தினார். ஆய்வு செய்ய வந்த முதல்வர் இவ்வாறு தங்களுடன் எளிமையாக உணவு அருந்தியது அங்கிருந்த மக்களை நெகிழச் செய்தது.

முதல்வர் செய்த இந்த ஆய்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அம்மா உணவகங்களில் தினந்தோறும் பொதுமக்கள் உணவருந்தி வருவதன் எண்ணிக்கை தவறாக கூறிய முதல்வர் பின்னர் அருகில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு ‘4 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்’ என்ற சரியான தகவலை அளித்தார்.

மேலும் பத்திரிகையாளர் பலர் அவரிடம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை, டெல்லி நிஜாமுதீன் கூட்டம் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு வரிசையாக பதிலளித்தார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

author avatar
Parthipan K