உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்…..! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு…..!

0
60

இன்று காலை சுமார் 11 மணி அளவில் திரை அரங்குகளின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து பேச இருக்கின்றார்கள்.

ஆயுத பூஜையின் போது தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வாங்க வேண்டும் என்று முதல்வரிடம் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம், ஆகியோரின் தலைமையின் கீழ் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தமிழக முதல்வரை இன்று காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் திரையரங்குகள் சென்ற ஆறு மாதங்களாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகளால், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டனர், ஆனாலும் தமிழ்நாட்டில் இன்றுவரை திரையரங்குகள் திறப்பிற்கான எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இது சம்பந்தமாக செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதெல்லாம், மிக விரைவில் ஒரு நல்ல முடிவு தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து வருகிறார், இப்போது அதன் எதிரொலியாக தமிழக முதல்வர் திரையரங்குகளின் திறப்பு சம்பந்தமாக திரையரங்குகளின் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

திரையரங்குகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திரை அரங்குகளின் உரிமையாளர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.