மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!

0
84

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக சொல்கிறார்கள். அதோடு அப்போது அவர் அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போதே அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதன் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆன நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி ஆனதால் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் முதலமைச்சர் உடல் நிலை சீராக இருப்பதால் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். ஆனாலும் முதலமைச்சர் மூன்று தினங்களுக்கு வீட்டில் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.