எதிர்க்கட்சிதலைவர் மு க ஸ்டாலினின் செயலால் வருந்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

உலகமெங்கும் கொரோனாபேரிடர் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர் கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இன் குறை கூறும் தன்மையைக் கண்டு முதல்வர் பழனிசாமி வருந்துவதாகவும் திமுகவிற்கு விமர்சனத்தையும் அளித்துள்ளார்.

குறை சொல்வதற்கு என்ற உள்ள கட்சி திமுக தான். திமுக வினர் நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை விமர்சிப்பது குறித்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதி வழங்காதது குறித்தும் கேள்வி எழுப்பிய போது அதற்கான பதிலை அவர் அளித்தார்.

இக்கேள்விக்கு அவர்,’ திமுக ஆட்சி காலத்தில் வெள்ளம் புயல் போன்ற பெயரிடல் பேரிடர் வரும் பொழுது எவ்வளவு நிவாரண தொகை மக்களுக்கு வழங்கப்பட்டது? தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுத்துக் கொண்டிருக்கிறது.மாநில பேரிடர் நிதிகள் மத்திய அரசு 510 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் 312 கோடி கோடி ஒதுக்கி இருக்கிறது. இன்னும் நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழக அரசுக்கு தேவையான நிதி குறித்து பிரதமரிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டோம். நாங்கள் பெறுகின்ற இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். எங்களின் கடமையை நாங்கள் சரியாக தான் செய்கின்றோம்.

38 மக்களவை உறுப்பினர்களை கொண்ட திமுக இதுவரை எந்த கேள்வியும் கேள்வியையும் நிவாரண பணிக்கான உதவியையும் மத்திய அரசிடம் கேட்கவில்லை. இந்த சூழ்நிலையில் கூட அவர்கள் குறை மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார்கள். புயல் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் கூட குறை கூறிக் கொண்டே இருக்கக் கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான். குறை சொல்வதற்காக உள்ள கட்சி திமுக தான்.

நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்து வருகின்றனர் திமுகவினர். இதைக் கண்டு நான் மிகவும் வேதனை அடைகிறேன். மேலும் வருத்தப்படுகிறேன். எந்த மாநிலத்திலும் இந்த போது இந்தப் போல ஒரு நிலைமை ஏற்படவில்லை. ஆனால் தமிழகத்தில்  இப்படிப்பட்ட நிலைமை தான் நிலவுகிறது. இதற்காக நான் வேதனை அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 மேலும் மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உயிர்காக்கும் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் போது தமிழகத்தில் இவ்வாறு ஒரு சூழல் உருவாகி இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

 

Exit mobile version