யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!

0
55

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் காரணத்தால், தமிழக அரசு சமுதாயம், அரசியல், மதம் உள்பட அனைத்து கூட்டங்களுக்கும் தடை தொடரும் என்று அறிவித்து இருக்கின்றது.

நவம்பர் 16ஆம் தேதி முதல் 100 பேருக்கு அதிகமாக பங்கேற்கலாம். என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதேநேரம் பல துறைகளில் தளர்வுகளை அறிவித்திருக்கின்றது.

இதில் வரும் 16ம் தேதி முதல் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களில் 100 நபர்கள் வரை பங்கு பெறலாம் என தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் ,தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பாஜக சார்பாக பல கட்டங்களாக யாத்திரைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த யாத்திரையில் அந்த கட்சியின் தலைவர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர்,சமூக இடைவெளியை கூட கடைபிடிக்காமல் ஊர்வலமாக சென்றார்கள்.

அதேபோல திமுக தரப்பில் இருந்தும் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றார். அடுத்தகட்ட பிரச்சார கூட்டங்களில் திமுக சார்பாக 100 நபர்கள் வரை கலந்து கொள்வது போல ஏற்பாடு செய்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது .அதே போல ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டங்களை நடத்துவதற்கு ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் வெளியிடப்பட்ட உத்தரவு இப்போது ரத்து செய்யப்படுகின்றது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தொற்றின் இரண்டாவது அலை பரவும் அபாயம் இருப்பதன் காரணமாக இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.