பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

0
93

சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையுடனும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடைகளும் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .இது தொடர்பாக சரியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது போன்ற செயல்கள் தவறுதான் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆயிரம் வேறுபட்ட கருத்தை தெரிவித்தாலும் தற்போதுள்ள காலகட்டத்தில் திருமண பேச்சு என்று வந்துவிட்டால் 90களில் பிறந்தவர்கள் திருமண வயதை அடைந்த பிறகும் இன்னமும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள 2000களில் பிறந்த நபர்கள் 90களில் பிறந்த நபர்களை பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பள்ளி கல்லூரி பாடங்களை கருக்கிறார்களோ இல்லையோ இந்த 90களில் பிறந்தவர்களை பார்த்து வாழ்க்கை படங்களை நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளனர்.

இவை அனைத்தையும் மனதில் வைத்து தான் தற்போது இந்த 2000 களில் பிறந்த ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்கும் பிடித்து விட்டால் அவர்கள் வயது ஜாதி என எதையும் பார்ப்பதில்லை. துணிச்சலாக எந்த ஒரு முடிவையும் மேற்கொண்டு விடுகிறார்கள்.

இன்னும் ஆராய்ந்து பார்த்தால் 90களில் பிறந்த நபர்களின் வளர்ப்பு ஒரு விதமானது இந்த 2000 முதலில் பிறந்த நபர்களின் வளர்ப்பு ஒரு விதமானது இருவருக்கும் இடையில் 10 ஆண்டுகள் தான் வித்தியாசம் இருக்கும் ஆனால் இந்த 10 வருட இடைவெளியே மிகப்பெரிய இடைவெளியாக இருக்கிறது.

90களில் பிறந்தவர்கள் செய்ய தயங்கும் பல விஷயங்களை 2000களில் பிறந்த பலர் மிகவும் அசால்டாக செய்து முடித்துவிட்டு போகிறார்கள் ஆகவே தான் 2000 களில் பிறந்த பல்வேறு நபர்களுக்கு திருமணம் ஆகியும் இன்னமும் இந்த 90களில் பிறந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.