காலணி வாங்கவே காசு இல்லை… திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!

0
159

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் ஓப்பனராக களமிறங்கிய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார்.  அதேபோல் தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 மற்றும் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 221ஐ தொட்டது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்ற போதிலும் அந்த அணியின் புதுமுக இளம் பந்துவீச்சாளர் சேட்டன் சக்காரியா 4 ஓவரில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது அபார ஆட்டம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சேட்டன் சக்காரியா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் தொடரில் விளையாடினார்.  அதில் கர்நாடக அணிக்காக விளையாடிய சக்காரியா, சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.  அவரது திறமை கிளன் மெக்கிரத் நடத்தி வந்த எம்.ஆர்.எப் பேஸ் தொண்டு நிறுவனத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுத்து பெரும் உதவியாக இருந்தது.

பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த சக்காரியா, நல்ல சூக்கள் கூட வாங்க முடியாமல் தவித்து வந்தார். பின்னர் அந்த அணியில் விளையாடிய மூத்த பேட்ஸ்மேன் செல்டன் ஜாக்சன் தான் அவருக்கு சூக்களை வாங்கி கொடுத்தார்.

வாழ்க்கையில் மிக கஷ்டப்பட்டு தனது திறமையால் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அவரை எடுத்துள்ள ராஜஸ்தான் அணிக்கு தனது விஸ்வாசத்தை காட்டும் விதமாக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சக்காரியா மிக அற்புதமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி மிகப்பெரிய அளவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கண்டிப்பாக தொடர் முழுவதும் இவர் நன்றாக பந்துவீசி ராஜஸ்தான் அணிக்காக தனது முழுப் பங்களிப்பை நிச்சயம் கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K