திமுகவின் பரம்பரை தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

0
70

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் தீவிரமான அரசியலில் குதித்து இருக்கிறார். திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்து வரும் அவர் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதிலும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் உதயநிதியின் பிரச்சாரத்திற்கு திமுகவினர் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது விரைவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அவர் மீண்டும் மாநிலம் முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .இதன் காரணமாக, அவர் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்யும் வேலையில் திமுகவின் தலைமையும், பிரசாந்த் கிஷோர் குழுவும் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிலும் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலேயே ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேகத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி ஸ்டாலின் பல்வேறு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு தொகுதி. ஆனாலும் ஸ்டாலின் 1984ஆம் வருடம் முதல்முறையாக அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்ற காரணத்தால், இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தற்போது தன்னுடைய பட்டியலில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2011 2016 ஆம் வருடங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற ஜெ அன்பழகன் தற்சமயம் இல்லை என்ன காரணத்தால், திமுக அங்கு பலமாக இருப்பதாலும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதி முடிவு செய்திருப்பதாக அந்த கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குஷ்புவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று காய்நகர்த்தல்கள் இருந்தாலும் அந்தத் தொகுதியில் முழு கவனத்தையும் செலுத்த நேரலாம். மாறாக தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதில் உதயநிதிக்கு சுணக்கம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே சென்னையில் திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி வெற்றி பெற்ற துறைமுகம், சைதாப்பேட்டை, அண்ணாநகர் போன்ற தொகுதிகளை திமுக தற்சமயம் கையில் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இப்பொழுது விருப்பமனு குறித்த அறிவிப்பு வெளியான காரணத்தால், விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவற்று வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகலாம். அப்பொழுது இந்த விவகாரம் உறுதியாகும் என்று சொல்லப்படுகிறது.