2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

0
61

சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற விருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆனது இன்றைய தினம் ஆரம்பமாகிறது.

வைரஸ் காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்றது இருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுமார் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தோடு கலந்து ஆலோசித்து சென்ற வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. இணையதளம் வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் இந்த முறை நேரடியாக டிக்கெட் வழங்குவதற்கான கவுண்டர்கள் எதுவும் இல்லை ஆனாலும் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்த என்னை காண்பித்து சேப்பாக்கம் மைதானத்தில் நுழைவுச் சீட்டை வாங்க முடியும்.

இந்த டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் விக்டோரியா ஹால் சாலையில் இருக்கின்ற மூன்றாம் எண் சாவடியில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது பதினோராம் தேதி காலை 10 மணி முதல் ஆட்டம் நடைபெறும் நாட்கள் வரை இந்த சாவடிகள் அனைத்தும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2012ஆம் வருடம் இந்தியா, மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பின்னர் சென்னை மாநகராட்சியால் மூடப்பட்ட ஐஜேகே ஸ்டாண்டுகள் 8 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சிடிஇ லோயர் ஸ்டேண்டுக்கான டிக்கெட்டின் விலை 100 ரூபாயாகவும் ஆப்பர் லோயர்ஸ் டேண்டுக்கான டிக்கெட்டின் விலை 150 ரூபாயாக அப்பர் டேண்டுக்கான விலை 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் விற்பனை செய்யப்படும் வெளியில் உள்பட இந்த கேள்விக்கு அனுமதிக்கப்படவில்லை மொத்தமாக 15 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்படும் என்று தெரியவருகிறது.

மைதானத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்,குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்பால் அமர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.