இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி! வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

0
59

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதே போல ஐந்து 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி நேற்றைய தினம் டெஸ்ட் தொடர் ஆரம்பம் ஆனது.

வைரஸ் பரவலிற்குப்பின்னர் சுமார் ஒரு வருட காலம் கடந்து இந்திய நாட்டில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான் என்ற காரணத்தால், வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதன்படி இந்தியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இருக்கின்ற மைதானத்தில் நேற்றையதினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இருந்தார். அவருக்கு அடுத்து வந்த லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு டாம் சிம்ப்லியுடன் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இணைந்த இந்த ஜோடி பிரமாதமாக விளையாடியது.

ஜோ ரூட் 164 பந்துகளில் 12 பவுண்டரி உடன் சதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதன் வழியாக 100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்களை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ஜோ ரூட். அதோடு தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமும் அடித்து இருக்கிறார்.

ஜோ ரூட் உடன் இணைந்த டான்ஸ் பிரமாதமாக ஆடி 87 ரன்கள் எடுத்த சமயத்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 128 ரன்களை எடுத்திருக்கிறார். பும்ரா 2 விக்கெட்டுகளும் அஸ்வின் ஒரு விக்கெட்டும் சாய்த்திருக்கிறர்கள் . நேற்றைய தினத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது.