இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்! யாருக்கு இடம்!

0
72

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஆட்டத்திற்க்கான இந்திய அணியில் இரண்டாம் வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு இஷாந்த் சர்மா, மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாக சொல்கிறார்கள்.

இந்திய நாட்டிற்கு வருகை தந்திருக்கிற இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நாளையதினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் 50 சதவீதம் வரையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஆறு தினங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையானது முடிவுற்று தற்சமயம் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் காரணத்தால், இங்கிலாந்து நாட்டு ஆடுகளத்தை போல் இருக்கிறதே என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக தெரிவிக்கப்படும் போது இது வழக்கமான சேப்பாக்கம் ஆடுகளம் போல தான் இருக்கின்றது ஈரப்பதம் இருக்கும் சமயத்தில், ஆடுகளத்தில் புற்கள் நிச்சயமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக, ஆடுகளத்தில் அவ்வளவு சீக்கிரம் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை அதோடு நிச்சயமாக ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றார்போல இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ,இந்திய கிரிக்கெட் அணி தனது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்க இருப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது. பிரதான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா தொடர்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவதாக பந்துவீச்சாளர் என்ற இடத்திற்கு அனுபவ வீரர் இஷாந்த் சர்மா மற்றும் இளம் வீரர் முகமது சிராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

இஷாந்த் சர்மா டெஸ்ட் ஆட்டங்களில் களம் இறங்கி சுமார் ஒரு வருட காலம் ஆகிவிட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் அறிமுகமாகி சுமார் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி சிராஜ் அசத்தியிருக்கிறார். ஆகவே இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடையே இருக்கின்ற போட்டியில் கடைசி சமயத்தில் தான் இவர்களில் யாருக்கு அணியில் இடம் கொடுக்கப்படும் என்று தெரியவரும் என்று தெரிகிறது.

சுழற்பந்து வீச்சாளர்களின் அஸ்வின், மற்றும் குல்தீப் யாதவ் போன்றோருடன் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்ஷர் பட்டேல் போன்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் ஏழு பேட்ஸ்மேன் மற்றும் 4 பந்துவீச்சாளர்கள் என்ற அடிப்படையில் வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு விளையாடும் அணி பட்டியல் முடிவு செய்யப்படும்.