எம்ஜிஆர் ஆக மாறிய ஓபிஎஸ்! கையெடுத்துக் கும்பிட்ட வேளச்சேரி மக்கள்!

0
74

புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் கனமழையால் வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது அந்த பகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முட்டி அளவு நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் அவர் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பார்வையிட்டு பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

வேளச்சேரி தொகுதி முன்னரே சதுப்புநில பகுதி என்ற காரணத்தால், அங்கே மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி வருகின்றது. அதன் அடிப்படையில் சென்ற இரண்டு தினங்களாக பெய்து வந்த கணமழை காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகளில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி இருக்கின்றது மழை நீரில் பழுதடையாமல் இருப்பதற்காக ரயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ராம் நகர் உள்பட பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு இருக்கின்றன வேளச்சேரி பேருந்து நிலையம் உட்பட பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி இருக்கின்றது இதன்காரணமாக மழைநீரை அகற்றுவதற்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள் பல பகுதிகளில் தரை தளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது இருப்பதால் மக்கள் மிகப் பெரிய சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கந்தன்சாவடி தரமணி பள்ளிக்கரணை உள்பட பல இடங்களிலும் மழைநீர் தேங்கி கடலோர காட்சியளிக்கின்றது அந்த பகுதிகளில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கின்றார். அந்த சமயம் எதைப் பற்றியும் நினைக்காமல் முழங்காலுக்குமேல் சூழப்பட்ட நீரில் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றார் அவருடைய எளிமையை மக்கள் போற்றி வருகிறார்கள்.

எம்ஜிஆர் ஆட்சியின்போது சென்னையில் வெள்ளம் வந்த நிலையில் அவர் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்கள் பிரச்சனையை கேட்டறிவாராம் அதே போல இப்போது ஓபிஎஸ் மக்கள் பணியாற்றி வருகின்றார்.