சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

0
106

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

சில மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீர்மானைத்தை நிறைவேற்ற திமுக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இசுலாமியர்களின் ஒட்டுமொத்த ஜமாத் அமைப்பினர்களும் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்ற தலைவார் வாராகி சார்பில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும், பொது சொத்துகளுக்கு அசம்பாவிதமோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தார். தடை விதித்தாலும் இன்று சொன்னபடியே போராட்டம் நடக்கும் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்கள் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளது. இதில் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் மட்டும் 2000 போலீசார் அவசரமாக குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னிறுத்தி களத்திற்கு வந்தால் அனைவரையும் கைது செய்ய காவல்துறை தயாராக இருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachandiran