சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

0
85
chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation
chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி ,கட்டிடங்கள் ,கழிவுநீர் பாதையில் இரங்கி சுத்தம் செய்வதற்கு தனி நபர் நியமிக்க கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கையை மீறி நபரை நியமித்து சுத்தம் செய்யும் பொழுது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிமையாளர்கள் ரூ 15  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் யாரேனும் தனி நபர் வைத்து சுத்தம் செய்வதை தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K