கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை! மகேந்திரசிங் தோனி!

0
121

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், கூட தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அவர் தமிழகத்தில் எப்பொழுது விளையாண்டாலும் கூட அவருக்கு அந்த ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாகவே காணப்படும். அந்த ஆட்டத்தில் அணி தோல்வி என்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, ரசிகர்களிடையே இவருக்கு இருக்கும் அந்தஸ்து எப்போதும் குறையாது.

அப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய மதிப்புக்குரிய நபராக இவர் வலம் வருவதற்கு காரணம் இந்தியாவிலோ, அல்லது அந்நிய மண்ணிலோ, எங்கே விளையாடினாலும் அணி தோல்வியை நோக்கி சென்றாலும் சரி அல்லது வெற்றியை நோக்கி சென்றாலும் சரி ஆடுகளத்தில் இவர் மட்டும் எப்பொழுதும் அமைதியின் உருவாகவே நின்றிருப்பார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மனதில் இவர் நிறைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இருபத்தி 25வது ஆண்டு விழா நிகழ்வு சென்னை எம்.ஆர்.சி நகரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று கொண்டதாகத் தெரிகிறது.

கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், சதுரங்கம், கால்பந்து, தடகளம், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம், போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் பிறகு உரையாற்றிய அவர், மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் நான் பங்கேற்பது இதுதான் முதன்முறை என்று தெரிவித்தார். சென்னையில் இருந்தபடி தன்னுடைய ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பள்ளி அளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன் மாவட்ட அளவிலான போட்டிகள் மூலமாக பல வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், சென்னையை தன்னுடைய மற்றொரு தாய் வீடாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்

. திறமையான வீரர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியமிருக்க வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.