இந்த மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதாம்!

0
92

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கோவை, உதகை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற ஒரு சில மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளைய தினத்தை பொறுத்தவரையில் நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருபதாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருபதாம் தேதி மற்றும் 22ஆம் தேதியை பொருத்தவரையில் ஒரு சில வட மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தலைநகரான சென்னையை பொருத்தவரையில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை வரையில் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் நகர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.