மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

0
68

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து உள்ளது. இருந்தாலும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் தேவை என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மேலும், 90,000 மாத ஊதியத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற 57 மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், மகப்பேறு மருத்துவர் மற்றும் குழந்தை நல மருத்துவர், பொது மருத்துவர்கள் தேவை என்று கூறியுள்ளது. மேலும், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதனை ஜூலை 22-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவித்து உள்ளது.

அதனை தொடர்ந்து, வரும் 27ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது. எனவே மருத்துவர்கள் நேரடி தேர்வுக்கு தயாராகி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகளை சரிவர பார்த்துக் கொள்வதற்கு சிறிது தாமதம் ஆகும் என்ற காரணத்தினால் மருத்துவர்கள் இன்னும் தேவை.

மருத்துவர்கள் அதிகமாக இருந்தால் சேர்க்கப்பட்ட நோயாளிகளை பார்த்துக் கொள்வது மிக எளிது என்ற நோக்கத்தின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சுகாதார நிலையங்கள் மற்றும் பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிக எளிதாக முடியும்.

author avatar
Jayachithra