ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

0
66

ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏஎல் விஜய் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பது தெரிந்ததே. இயக்குனர் கௌதம் மேனன் ’குயின்’ என்ற தலைப்பில் இணையதள தொடரையும், இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி வந்தனர். கௌதம் மேனனின் இணையதள தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கேரக்டரிலும், தலைவி திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரிலும் நடித்து வந்தனர்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் குயின் மற்றும் தலைவி ஆகிய இரண்டு படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்த போது இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏ எல் விஜய் ஆகியோர்களுக்கு உத்தரவிடப்பட்டது

இந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில் இன்று விளக்கம் அளித்தபோது குயின்’ இணையதளத்தில் தீபா குறித்த கேரக்டர் இல்லை என்றும் அதனால் அவர் இந்த வழக்கை தொடர உரிமை இல்லை என்றும் கூறினார். அதேபோல் விஜய் தரப்பில் தலைவி முழுக்க முழுக்க கற்பனையில் உருவான கதை என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ’குயின்’ மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் தடை இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதுமட்டுமின்றி தலைவி திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதை என்று அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது

author avatar
CineDesk