தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

0
71

கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் முழுமையாக குணமடையாதலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அக்டோபர் 1 தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது போன்ற பல தகவல்களும் வெளியானது.

ஆனால் இன்றுவரை பள்ளிகள் வழக்கம் போல் எங்கும் இயங்கவில்லை. பள்ளிப் பாடங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமே நடத்தி வருகின்றனர்.  இதனால் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று சென்னை  உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. அதுமட்டுமன்றி நவம்பர் 11ஆம் தேதி தமிழக அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
Parthipan K