படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

0
78

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஆங்காங்கே அந்த கட்சியினரின் அடாவடி தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே அந்த கட்சி உடன்பிறப்புகளின் அட்டகாசம் தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் சென்னை புறநகரில் இருந்த ஒரு அம்மா உணவகத்தை திமுகவின் உடன்பிறப்புகள் அடித்து நொறுக்கியது தான்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த மேல் மாம்பட்டை கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைக்கு காரணம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஒரு சிலர் கோவிந்தராசுவை தாக்கியது தான் என அந்த முந்திரி ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களும், கோவிந்தராஜனின் உறவினர்களும் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இது தொடர்பான புகார் ஒன்றையும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் தெரிவித்திருப்பதாவது கடந்த 19ஆம் தேதி வேலைக்குச் சென்ற என்னுடைய தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்து உயிரிழந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் நான் மருத்துவமனைக்கு சென்று அங்கே பார்த்த சமயத்தில் என்னுடைய தந்தையின் உடலில் ரத்த காயங்கள் அவரை அடித்து துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளிட்டவை காணப்பட்டது. ஆகவே என்னுடைய தந்தையை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என கூறியிருக்கிறார் செந்தில்வேல்.

அவருடைய மரணம் தொடர்பாக கடம்புளியூர் காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை ஆகவே என்னுடைய தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்களை வைத்து உடற்கூறு ஆய்வு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். அதோடு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் செந்தில்வேல் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதி எம் நிர்மல்குமார் முன்னிலையில் அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் அரசு தரப்பில் அரசு மருத்துவர்கள் மூன்று பேரை வைத்து பிரேத பரிசோதனை செய்யவும் அந்தப் பிரேத பரிசோதனையை காணொளி மூலமாக பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் நீதிபதி நிர்மல்குமார் குறுக்கிட்டு பேசியதாவது, மனுதாரர் விருப்பம் கொண்டால் சென்னையில் இருக்கின்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாலையில் உடற்கூறு ஆய்வு செய்து கொள்ளலாம் என்று கூறினார் அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு ஆட்சேபம் தெரிவித்தார்.

அதோடு குற்றம்சாட்டப்பட்ட இருக்கின்ற அவர் திமுகவைச் சார்ந்த மக்களவை உறுப்பினர் என்ற காரணத்தாலும், அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதாலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்களை வைத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் கோவிந்தராஜனின் உடலை ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதோடு இந்த மரணங்களுக்கு விசாரணை அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய காடாம்புலியூர் ஆய்வாளருக்கு உத்தரவை பிறப்பித்து விசாரணையை பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் கண்காணிக்கவும், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையிடுவதற்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.