அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! வெள்ளியின் விலையும் சரிவு!

0
62

இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்போதும் உச்சத்தில் தான் இருந்து வருகிறது, அதோடு தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி. தொழில் முதலீடு செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதலீடு செய்வதற்கான முதன்மைத் தேர்வாக இருப்பது தங்கம் தான். ஏனென்றால் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் அது எப்போதும் நஷ்டத்திற்கு உள்ளாகாது என்று அனைவரும் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டார்கள்.

இந்த நிலையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் வரையில் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்ற மாதம் முதல் நாள் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்தது, இதனால் தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை இருந்து வருகிறது.

இந்த வாரத்தில் வாரத்தின் முதல் நாளும் 75 ஆவது சுதந்திர தினமான கடந்த 15 ஆம் தேதி தங்கத்தின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 39000க்கும் மேல் தொடர்ந்து நீடித்து வந்தது. வெள்ளி 1 கிலோ 64,800 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்றும் சரிவைக் கண்டிருக்கிறது.

அதனடிப்படையில், சென்னையில் ஆபரண தங்கம் 1 பவுனுக்கு 304 ரூபாய் குறைந்து 39,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை 4,876 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை 1 கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 63.80க்கு விற்பனையாகி வருகிறது, வெள்ளி 1 கிலோ 1000 ரூபாய்க்கு குறைந்து 63,800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.