தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?

0
96

மார்ச் மாதம் 3ம் வாரத்தில் நடைமுறப்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஐந்தாவது முறையாக நீட்டிக்கபபட்டுள்ளது.

ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்ட போது திருமணம், மருத்துவ அவசரம், இறப்பு போன்றவற்றில் பங்கேற்க இ-பாஸ் பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் இ-பாஸ் நடைமுறையில் சில மாற்றங்களை அறிவித்திருந்தது. அதன்படி
சென்னையிலிருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், 8 மண்டலங்களாக பிரிந்து, மண்டலம் விட்டு மண்டலம் சென்றால், இ-பாஸ் அவசியம், மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்றால் கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தி வைக்க வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேரவை இருந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இ-பாஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
Parthipan K