நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
53

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கே கே சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நோய் தொற்று வைரஸ் பரவி இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறது மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக, இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி உண்மையான போர்க்கால அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போது இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது .ஆக்சிஜன் நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனங்கள் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கோரிக்கை வைக்கிறது என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் தற்போது நாடு இருக்கும் நிலைமையில், அவசர நிலை பிரகடனப் படுத்தினால் தான் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள். கடந்த 1975ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் முதல் முறையாக அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கட்டுப்படுத்த முடியாத ஒரு பெரிய பிரச்சனைகள் எழுகிறது என்றால் அவசர நிலையை பிரகடனப்படுத்தி அனைத்து அதிகாரங்களும் ஒருவரின் கைக்கு சென்றால் மட்டுமே அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.

ஆகவே நாட்டில் தற்போது இருக்கின்ற சூழலை பார்த்தோமானால் நிச்சயமாக சுகாதார அவசர நிலை பிரகடன படுத்தினால் நிச்சயமாக அது பலனளிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.