இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

0
99

கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் பிரதமர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது தூய்மை இந்தியா என்ற திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்கள், கிராமப்புறங்களில், நகராட்சி பேரூராட்சி என்று அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு என்று தனியாக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த திட்டமானது இந்தியாவில் மிகவும் அருமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகத்தில் இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்திலேயே ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய குப்பை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு என்று தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பணியினை செவ்வனே செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் ஒரு சில பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக, நீண்ட தினங்களாக திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசு ஊரடங்கு அளித்த தரவுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இப்படி திறக்கப்படும் நிறுவனங்களின் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற கழிவுகள் அருகில் இருக்கின்ற பொது இடங்களில் கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் விதத்தில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி வீசுபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும், சாக்கடை மற்றும் திரவக் கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.