கொரோனா – இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் தமிழக மாவட்டங்கள்

0
50

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2,26,770 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 1,09,462 குணமடைந்துள்ள நிலையில் 6,348 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய அளவில் அதிக கொரோனா தொற்றுள்ள மாவட்டங்கள் குறித்து நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மற்றும் செங்கல்பட்டு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தை பொருத்த வரை 28,694 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 15,762 குணமடைய 232 பேர் இறந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 64% பாதிப்பு 15 மாவட்டங்களிலிருந்து பதிவாகி உள்ளது. இதில் மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

உலக அளவிலான ஹாட் ஸ்பாட்களில் பெரிய ஹாட்ஸ்பாட்டாக திகழும் மும்பை மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 57.37 சதவீதமாகவும், நாட்டின் மொத்த பாதிப்பில் 19.94 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல் டெல்லியில் கண்டறியப்பட்ட தொற்று நாட்டின் மொத்த பாதிப்பில் 11.56 சதவீதமாக உள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்து வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில், சென்னையின் பங்கு 67.91%. நாட்டின் பாதிப்பில் சென்னையில் பங்கு 8.59%.

அதேபோல், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் இந்த பட்டியலில் புதியதாக இடம் பெற்றுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 5.26% பங்கும், நாட்டின் மொத்த பாதிப்பில் 0.67 சதவீதமும் செங்கல்பட்டு வகிக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,851 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு, 273 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

உலகில் அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை 10,000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K