சீஸ் ஆம்லெட் ! எவ்வாறு செய்வது காண்போம்!

0
96

சீஸ் ஆம்லெட் ! எவ்வாறு செய்வது காண்போம்!

தற்போது அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை ஒவ்வொரு வகையில் சமைத்து உண்பார்கள். மேலும் முட்டை வருவல் , முட்டை தோசை, முட்டை பணியாரம், சீஸ் ஆம்லெட் போன்றவைகள் செய்யலாம் அந்த வகையில் இன்று சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :எட்டு முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு வெங்காயம் தேவையான அளவு நான்கு தக்காளி , இரண்டு பச்சை மிளகாய் , நான்கு சீஸ் , எண்ணெய்தேவையான அளவு மிளகுத் தூள்தேவையான அளவு உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :சீஸ் ஆம்லெட் செய்வதற்கு முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, முட்டையுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தவாவை சூடாக்கி பரவலாக எண்ணெய் தடவி முட்டைக் கலவையை அதில் ஊற்றி, மூடி போட்டு மெல்லிய தீயில் வைத்து வேக விட வேண்டும்.

ஆம்லெட் வெந்த பிறகு அதன் ஒரு பாதியில் மட்டும் நறுக்கிய சீஸை பரவலாக தூவி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.அதன் பிறகு சீஸ் உருகியதும் மறு பாதியால் மூடவும். சுவையான சீஸ் ஆம்லெட் ரெடி. தேவைக்கேற்ப துண்டுகள் போட்டு கொள்ளலாம்.

 

author avatar
Parthipan K