சவுக்கு சங்கருக்கு சாட்டையடி கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

0
127

பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த youtuber மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் இந்த தீர்ப்பு தொடர்பாகவும், நீதிபதி தொடர்பாகவும், அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தார் என சொல்லப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்குகிறது என்று சொன்னால் அந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியை சார்ந்தவர்களோ அல்லது அரசியல் தலைவர்களோ, எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க முடியாது, தெரிவிக்கவும் கூடாது.

இந்த நிலையில், அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிடும் விதமாக அந்த தீர்ப்பு தொடர்பாகவும், நீதிபதி தொடர்பாகவும், கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக மாறு சவுக்கு சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த அவமதிப்பு வழக்கு பதிவு செய்த பிறகும் கூட யூடியூப் சேனலில் இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் கிரிமினல் அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.

இந்த வடக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் தமிழக அரசு ஊழியராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கர் என்ற சவுக்கு சங்கர் கடந்த 22 ஆம் தேதி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த போது ஒட்டுமொத்த உயர்நீதித்துறையும் ஊழலில் சிக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஆகவே அவர் மீது ஏன் கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்பதற்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.