தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

0
60

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

 

அனைவர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செடி என்றால் அது கற்பூரவள்ளி செடியை குறிக்கலாம்.
ஏனெனில் இந்த கற்பூரவல்லி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
ஆயுர்வேதத்தில் இந்த கற்பூரவல்லி இலைக்கென்றே தனி மகத்துவம் இருக்கின்றது.
முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிக கட்டாயம் இந்த செடி இருக்க வேண்டும்.இந்த கற்பூரவள்ளி செடியானது மிக எளிமையாக தண்ணீர் இருக்கும் இடங்களில் வளரக்கூடிய ஒரு செடியாகும் எனவே அனைவர் வீட்டிலும் தொட்டி செடியாகவே இதனை வளர்க்கலாம்.
அப்படி என்ன நன்மைகள் உண்டு இந்த கற்பூரவள்ளி இலையில்?வாங்க தெரிந்துகொள்ளலாம்!

கற்பூரவள்ளி இலையின் பயன்கள்!

5 அல்லது 6 கற்பூரவள்ளி இலையை எடுத்து நன்றாக கழுவி இதன் சாற்றைப் பிழிந்து சிறிதளவு சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் உடனடியாக தீரும்.

அதித தலைவலி உள்ளவர்கள்,கற்பூரவல்லி இலைச்சாறு,சர்க்கரை மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் நொடியில் குணமாகும்.

உடலில் ஏதேனும் கட்டிகள் ஏற்பட்டால்,இந்த கற்பூரவள்ளி இலையை அரைத்து கட்டியின் மீது பூசி வந்தால் கட்டிகள் விரைவில் கரைந்து குணமாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ஜீரணக்கோளாறுகள்,வயிற்று சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் நீங்கும்.அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்கும்.

இந்த இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதில் குணமடையும்.

ஆஸ்துமா அல்லது சைனஸ் பிரச்சனையின் காரணமாக மூச்சு விட சிரமப்படுபவர்கள்,ஐந்து அல்லது ஆறு கற்பூரவள்ளி இலையை எடுத்து சிறிதளவு இஞ்சி மற்றும் ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலையுடன் சேர்த்து, 150ml தண்ணீரில் கொதிக்கவைத்து,வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் மூச்சு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சுவாசித்தல் எளிதாகும்.

கற்பூரவள்ளி இலையை எடுத்து நன்றாக கழுவி சாற்றை பிழிந்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகையில்,மார்புச்சளி இரண்டே நாட்களில் குணமாகும்.

 

author avatar
Pavithra