வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

0
75

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நவ. 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10:30 மணியளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்று முதல் (நவ.15) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவ. 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K