திமுக போட்ட முக்கிய திட்டம்! கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி!

0
71

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போது பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார், இதனால் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை, அம்மா உணவகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களும், கர்ப்பிணி தாய்மார்களும், மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல திட்டங்களையும் அவர் கொண்டு வந்தார், ஒரு சில திட்டங்கள் எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளாகும், ஆனால் அந்தத் திட்டங்கள் மூலமாக தமிழக மக்கள் வெகுவாக பயன் அடைந்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு கொடுத்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றதுடன், தன் வாழ்க்கையை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழக அரசியல் வரலாற்றில் தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அவரை கவுரவிக்கும் விதத்தில் சென்னை நந்தவனத்தில் அமைந்திருக்கின்ற நிதித்துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று அதிமுக ஆட்சிக்காலத்தில் பெயர் சூட்டப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

அம்மா வளாகம் என்ற பெயரிலேயே இருந்து வரும் அந்த நிதித்துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் அமைச்சராகவும், பணிபுரிந்த பேராசிரியர் அன்பழகன் சிலையை முதலமைச்சர் திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனவே இருக்கின்ற அம்மா வளாகம் என்ற பெயரை நீக்கிவிட்டு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்ட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

பேராசிரியர் அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கே சிலை வைப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம் அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றி பேராசிரியர் அன்பழகன் மாளிகை என்று வைப்பது நாகரீகமற்ற செயல் ஒரு பெயரை எடுத்துவிட்டு மற்றொரு பெயரை வைப்பது என்பது ஒருவரை இழிவு படுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல ஆகிவிடும் என கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல் தமிழ் பண்பாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், எதிரான செயல். ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தது மட்டுமல்லாமல் ஒரு தேசிய தலைவராக எல்லோராலும் மதிக்கப்பட்டார். இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருந்தார்கள். வட இந்திய மாநிலத்திற்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரு தமிழினத் தலைவர் ஜெயலலிதாதான். இவ்வாறான ஒரு தலைவரின் பெயரில் இருக்கின்ற வளாகத்தில் அவருடைய பெயரை மாற்றம் செய்து மற்றொருவர் பெயரை கொண்டு வருவது என்பது மிகவும் தவறான செயல். ஒருவேளை அவ்வாறு வெளியான செய்திகளில் உண்மை இருந்தால் அது அநாகரிகத்தின் உச்சம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் இதற்கு அதிமுக சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன், ஆகவே அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றி பேராசிரியர் அன்பழகன் மாளிகை என்று அமைக்கும் முடிவை முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும். புதிதாக வேறு மாளிகை தமிழக அரசால் கட்டப்படும் போது அதற்கு அவருடைய பெயரை சூட்டிக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.