பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

0
66

நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தெர்மல் ஸ்கேனர் மூலமாக வெப்பநிலை பரிசோதனை, போன்ற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், தொற்று காரணமாக ,எந்த ஒரு பொது தேர்வும் ரத்தாகாது என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார் செங்கோட்டையன். ௧௦, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தொற்றின் காரணமாக இந்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்படும். மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், எதிர்பார்த்ததை போலவே எளிமையான முறையில் தேர்வுகள் நடைபெறும் பொதுத் தேர்வில் செயல்படுத்தப்படும் மாற்றங்கள் தொடர்பாக முதலமைச்சரின் அனுமதி வாங்கி அதன் பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.