Connect with us

Breaking News

டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Published

on

Change in Tasmac operation time! The order issued by the High Court!

டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

கடந்த 2019 ஆண் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யபடுகின்றது.பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் தான் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement

மேலும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் மதுகடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று தான் வருகின்றது.ஆனால் அதன்  விற்பனை மட்டும் அதிகரித்து தான் வருகின்றது.தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும்.மது விற்பனை செய்யும் நேரம் மதியம் இரண்டு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளனர்.

இந்த மனுவை பல கட்டங்களாக விரசாரித்த நீதிபதிகள் பய உணர்வை ஏற்படுத்துவதற்காக சட்டரீதியான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன.இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மது அருந்துவதில் மிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றது.21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவது வருந்தத்தக்கது தான் என தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யவும்,வாங்குவதற்கும் உரிமம் வழங்குவது தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி க்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழக்க வேண்டும்.

Advertisement

டாஸ்மாக் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வது.21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும் டாஸ்மாக் கடைகளை மதியம் இரண்டு மணி முதல் இரவு எட்டு பணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement