சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லைகா நிறுவனம்

0
90

சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லைகா நிறுவனம்

லைகா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சந்திரமுகி2 வில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.

இப்போது படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்துவரும் நிலையில் இதுவரை படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளது லஷ்மி மேனன் என்று சொல்லப்படுகிறது. இதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.