தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

0
108
#image_title

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கூறியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா “தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் என்.டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி செய்த போது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் 2.27 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆந்திர மக்கள் ஒரு போதும் இதனை நம்ப மாட்டார்கள்.

முதல் அமைச்சர் ஜெகன் மேகன் ரெட்டி அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 3, கர்நாடக முதல் அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 2, பாஜக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் 1 என மொத்தம் 6 வாக்குறுதிகளை திருடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்” என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.